
சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
அத்தபின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், "பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பல வழித்தடங்களில் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறினார்.
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பெண்கள் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Response to "அனைத்து பேருந்துகளில் சிசிடிவி கேமரா - தமிழக அரசின் அசத்தல் திட்டம் !!"
Post a Comment