தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு.? - முக்கிய தகவல்.!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார செயலர், சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி, பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு 30,000 கடந்த நிலையில் மே-31 வரை முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi