விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 16 வது சட்டசபை முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவையை தொடக்கிவைத்து பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும் திட்டங்களையும் விவரித்தார். அதில் புதிய ரேஷன் கார்டு பற்றிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதன்படி, புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க தமிழக அரசு 2.10 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4000 கொரோனா நிவாரண நிதியாக அறிவித்தது. இந்நிலையில், விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi