சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்க இந்த உணவுகளே போதும்- மருத்துவரின் கூற்று

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

அந்தவகையில், இரத்த சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்க மருத்துவர் சிவராமன் சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.



மருத்துவரின் கூற்றுபாரம்பரிய அரிசி வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

சிறுதானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

இட்லி, தோசை மாவு அரைக்க வெண் சோளம் பயன்படுத்தலாம்.

அரிசி சாதத்திற்கு பதிலாக வரகு அரிசி சாதம் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

மீன் உணவுகளை எண்ணெய் சேர்த்து சமைக்காமல் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

நாட்டுக்கோழியை எண்ணெய் சேர்த்து சமைக்காமல் எடுத்துக்கொள்ளலாம்.

சிகப்பு இறைச்சிகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கிழங்குகளை முற்றிலும் தவிர்க்கவும்.

அதிகம் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பச்சை காய்கறிகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

இனிப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தினமும் 4km நடைப்பயிற்சி செய்யலாம்.

மூச்சி பயிற்சிகளை தினமும் செய்யலாம்.

0 Response to "சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்க இந்த உணவுகளே போதும்- மருத்துவரின் கூற்று"

Post a Comment