
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று இனிமேல் அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின்படி,வரும் காலங்களில், தமிழ்நாடு முழுவதும் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சல் மூலம் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிமேல் எக்காரணம் கொண்டும் RTO அலுவலகங்களில் அவை நேரடியாக வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், விண்ணப்பதாரர்கள் வாகன் இணையதளத்தில் பதிவு செய்யும் போது சரியான முகவரி மற்றும் செல்போன் எண்ணை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகவரி தவறாக இருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ ஓட்டுநர் உரிமம் டெலிவரி செய்யப்படாது எனவும், அவை RTO அலுவலகங்களுக்கே திருப்பி அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவற்றை பெறுவதற்கு வாகன் இணையதளத்தில் மீண்டும் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டுமே தவிர, RTO அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர் அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
: சமாஜ்வாதி கட்சித் தலைர் அகிலேஷுக்கு சிபிஐ சம்மன் - நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
இந்த புதிய நடைமுறையால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "ஓட்டுநர் உரிமம் பெற போரீங்களா? - இனிமே இப்படி தான்! தமிழ்நாடு அரசு"
Post a Comment