10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாடத் தேர்விலிருந்து விலக்கு.. தமிழக அரசு அறிவிப்பு.!!

தமிழகத்தில் 12 அம்மா வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடக்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் தமிழ் மொழியை தாய் மொழியாக தேர்வு செய்யாத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு, கட்டாய தமிழ் மொழிப்பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2023-24 கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய தமிழக அரசு, சிறுபான்மை பிரிவு மாணவர்கள் அவர்களுடைய மொழிப் பாட தேர்வை எழுதலாம் என தெரிவித்துள்ளது

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi