மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (09.03.2024) இன்றைய பலன்கள்

மேஷம்:

இன்று உங்களுக்கு காதல் உணர்வுகள் மேலோங்கும். கற்பனையில் இருக்க வேண்டாம். யதார்த்தமான உரையாடல்களை மேற்கொள்ளவும். பணியிடத்தில் அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம். பொருளாதார விவகாரங்களில் நிலையான விதிகளை கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட எண் - 9


அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

ரிஷபம்:

உங்களுக்கு தவறான புரிதல் மற்றும் வெறுப்புணர்வு அதிகரிக்கக் கூடும். பலமான அடித்தளத்தை கட்டமைக்க வெளிப்படையான பேச்சு மிக அவசியம். புதிய வாய்ப்புகளை நீங்கள் தேடிக் கொள்ளலாம். கடந்தகால முதலீடுகளில் இருந்து பலன் கிடைக்கும். வங்கி சார்ந்த பணிகளால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
விளம்பரம்


அதிர்ஷ்ட எண் - 8

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

மிதுனம்:

ஆசை வார்த்தைகள் தான் காதலுக்கான தொடக்கமாக அமையும். பணியிடத்தில் புதிய அத்தியாயத்தை நீங்கள் பெற உள்ளீர்கள். மிகுந்த ஈடுபாடு காட்டினால் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்கு சேமிக்கவும்.

அதிர்ஷ்ட எண் - 15

அதிர்ஷ்ட நிறம் - பீஜ்

கடகம்:

இதுவரையிலும் காதல் அமையாதவர்களுக்கு புதிய காதல் உறவு ஏற்படும். வரையறுக்கப்பட்ட வருமானம், மனச்சோர்வு தருகின்ற வேலை என இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகலாம். உங்களுக்கான நிதிச்சுமை மற்றும் கடன் அதிகரிக்கும். குடும்பத்தினர் மீது அக்கறை செலுத்தவும்.
விளம்பரம்


அதிர்ஷ்ட எண் - 3

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

சிம்மம்:

உங்கள் காதல் உறவில் மகிழ்ச்சி ஏற்படும். பிறரை தவறாக எடை போட்டால் நீங்கள் வாய்ப்புகளை தவறவிட நேரிடும். சக ஊழியர்களின் கருத்துக்களை உள்வாங்கினால் வளர்ச்சியை எட்டலாம். கடனை திருப்பிச் செலுத்த முன்னுரிமை கொடுக்கவும். பணம் சம்பாதிக்க அவசரம் காட்ட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் - 4

அதிர்ஷ்ட நிறம் - கிரே

கன்னி:

கடந்த கால மனக்கசப்புகள் மீண்டும் உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும். உங்கள் நலன் மீது அக்கறை எடுத்துக் கொண்டால் மட்டுமே எதிர்காலம் சிறப்பானதாக அமையும். பணியிடத்தில் மிக கவனம் மற்றும் விழிப்புணர்வு தேவை. செலவுகளின்போது கவனக்குறைவு இருக்கக் கூடாது.
விளம்பரம்


அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

துலாம்:

உங்கள் உறவுகளில் குதூகலம் ஏற்படும். புதிய காதல் மலர வாய்ப்பு உண்டு. உங்கள் வேலை குறித்து நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு மாபெரும் பணவரவு உண்டு. கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை வெற்றியைத் தேடி தரும். புதிய இடங்களுக்கு பயணம் செய்யலாம்.

அதிர்ஷ்ட எண் - 1

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

விருச்சிகம்:

உங்கள் காதல் பக்குவமற்றதாக மாற வாய்ப்பு உள்ளது. காதல் உறவை வளர்ப்பதில் பொறுமை அவசியம். பணிச்சுமை அதிகரிக்கும். இருப்பினும் இடைவெளி எடுத்துக் கொண்டு உங்கள் நலன் மீது அக்கறை செலுத்துங்கள். பண விவகாரங்களில் யதார்த்த அறிவுத்திறன் முக்கியம்.
விளம்பரம்


அதிர்ஷ்ட எண் - 17

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

தனுசு:

காதல் உறவில் கடந்த கால கசப்புகளை மறந்து, அடுத்தகட்ட அத்தியாயத்தை நோக்கிச் செல்லவும். பழைய காயங்களை மறந்து புதிய வாய்ப்புகளை தேடிக் கொள்ளுங்கள். உங்கள் பணி சார்ந்து புதிய ஆச்சரியம் வந்து சேரும். புதிய வருமான வாய்ப்பு தேடி வரும்.

அதிர்ஷ்ட எண் - 11

அதிர்ஷ்ட நிறம் - கோரல்

மகரம்:

உங்கள் வாழ்வில் ஆர்வம் மிகுந்த நபரின் வருகை இருக்கும். அது குதூகலமான அனுபவங்களை தருவதாக அமையும். புதிய வாய்ப்பு தேடி வந்தாலும், நீங்கள் அவசரம் காட்டக் கூடாது. உங்கள் இலக்குகளின் மீது கவனமாக இருக்கவும். பொருளாதார முடிவுகள் தெளிவானதாக இருக்க வேண்டும்.
விளம்பரம்


அதிர்ஷ்ட எண் - 6

அதிர்ஷ்ட நிறம் - மெரூன்

கும்பம்:

காதல் சார்ந்த கனவுகள் நனவாகும். பணி சார்ந்த விஷயங்களில் அவசரம் காட்டாமால், உங்கள் நடவடிக்கைகளை பொறுமையாக கையாளவும். உங்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம். ஆனால், நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் - 18

அதிர்ஷ்ட நிறம் - ரூபி

மீனம்:

உங்கள் பணி சார்ந்த நல்ல காலம் பிறக்க இருக்கிறது. மாணவர்கள் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். உங்களிடம் சேமிப்பு அல்லது சொத்து இருந்தாலும் கூட உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சாலை மார்க்கமாக புதிய பயணங்களை மேற்கொள்ளலாம்.
விளம்பரம்


அதிர்ஷ்ட எண் - 12

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

Post a Comment

Featured Post

PYQ QUESTION ANSWERS

சேரும்போது மகிழ்வதும் பிரியும் பொழுது கலங்குவதும் யாருடைய தொழிலாக வள்ளுவர் குறிப்பிடுகிறார் (PYQ) A. வணிகர் தொழில்  B. உழவர் தொழில்  C. புலவ...

Designed by OddThemes | Distributed by Gooyaabi