12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் - விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 ஆயிரத்து 144 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,58,201 மாணவர்களும், 4,13,998 பேர் மாணவியர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் மற்றும் இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

நேற்று கணினி அறிவியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடந்தது. இந்நிலையில், 5 ஆயிரத்து 144 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு தொடங்கிய முதல்நாளன்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆப்செண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi