ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் இந்த வேலைய முடிங்க!

ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஆதார் கார்டில் உள்ள தனிநபர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சிம் கார்டு வாங்குவது, வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதன்படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் இதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் தேதி மார்ச் 14 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதுபோன்ற சூழலில், உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்தால், நீங்கள் அதை புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. அதை வீட்டிலேயே அப்டேட் செய்யலாம்.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi