புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு முதுநிலைப் படிப்புகள், 5 ஆண்டுகள் பட்டப் படிப்புகள், முனைவர் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 26, 27, 28 -ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள மையங்களில் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளை 43 ஆயிரத்து 609 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in -இல் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், காத்திருப்போர் பட்டியல், மாணவர் சேர்க்கை தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அதே இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்தது.