சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணியாக செயல்படும் பூண்டு!

சளி பிடிக்கும் போது மட்டும் உடல் பராமரிப்பு சற்று குழம்பிவிடுகிறது. சளி ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை உண்டு செய்வதால் தான் உடலில் இத்தகைய குழப்பம் உண்டாகிறது. அதே நேரம் காலங்காலமாக சீரான உணவு பழக்கத்தை கொண்டிருப்பவர்களுக்கு சளி பிடிக்கும் காலத்தில் கை வைத்தியமாக சில உணவை சேர்க்கும் போது சளியை எளிதாக குணப்படுத்த செய்கிறது.

பூண்டு ஆகாரமாக எடுத்துகொண்டவர்கள் குறைந்த முறை சளி பிடித்து உடல் குறைபாட்டையும் குறைவான் நாட்கள் பெற்றிருந்தார்கள்.

பூண்டை அதிகம் சேர்க்காதவர்கள் அதிக முறை சளி பிடித்து அதிக நாட்கள் உடல் குறைபாட்டையும் கொண்டிருந்தார்கள்.

பூண்டு எடுத்துகொள்ளும் போது சளி அதிக முறை உடலை தாக்காமல் இருப்பது கண்டறியப்பட்டது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பொருந்தும்.

சளி பிடித்த பிறகும் பூண்டு சேர்ப்பது சளி உபாதை அதிகரிக்காமல் பாதுகாக்கும். இப்போது குளிர்காலம் என்பதால் சளி பிடிப்பது அதிகமாக இருக்கும்.

அதனால் சளியின் தொடக்கத்திலேயே அதை முறுக்கி வெளியேற்ற பூண்டு வைத்தியம் செய்யலாம்.

பாலில் மஞ்சள் சேர்த்து பருகினால் சளி தீவிரமாகாது. சளியினால் வரக்கூடிய தொண்டை கமறல், தொண்டை கரகரப்பு நீங்கும் என்பது தெரியும். அதனோடு இந்த பூண்டையும் சேர்த்தால் நன்றாகவே பலன் கிடைக்கும்.

பூண்டு தோலை உரித்து இடிக்க வேண்டும். பாலை காய்ச்சி பூண்டு பல் சேர்த்து ( ஒரு டம்ளருக்கு 3 பல் பூண்டு) கொதிக்க வைத்து சிட்டிகை மிளகுத்தூள், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொடுக்க வேண்டும்.

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துகொள்ளலாம். வாரம் ஒரு முறை இதை குடித்துவந்தால் சளி தொந்தரவு அடிக்கடி இருக்காது.

மேலும், பெரியவர்கள் சளி தொந்தரவு அதிகமாக இருந்தால் பூண்டை தனியாக எடுத்துகொள்ளலாம். பூண்டு பல்லை எடுத்து அதனோடு நெய் சேர்த்து வாணலியில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இளஞ்சூடாக இருக்கும் போதே நன்றாக மென்று தொண்டையில் சாறுபடும்படி விழுங்கவும். சூடு ஆறுவதற்குள் இதை சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை பூண்டு குழம்பு வைத்தும் நல்லெண்ணெய் வைத்து சாப்பிடலாம். சளி, தொண்டை கரகரப்பு இருமலை குறைக்கும் பூண்டை அடிக்கடி சேர்த்து வந்தாலே சளி உபாதை இருக்காது.

சளி பிடிக்கும் காலத்தில் சளிக்கான மருந்தை காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய உணவாக எடுத்துகொள்வதன் மூலம் சளி நிவாரணம் முழுமையாக குணமாகும்.

வேகமாகவும் சரியாக கூடும். இதன் மூலம் உடல் ஏற்கனவே குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாடை கொண்டிருந்தாலும் அது சரிசெய்ய உதவுகிறது.

சளி தொந்தரவுக்கு மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் நல்ல பலன் அளிக்கிறது என்கிறது ஆய்வுகள். எனினும் வந்த பின் செய்யும் வீட்டு வைத்தியத்தை காட்டிலும் வருவதற்கு முன்பு கடைப்பிடிக்கும் இந்த ஆரோக்கியமான உணவு சளி உபாதையை பெருமளவு தடுத்துவிடுகிறது.

0 Response to "சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணியாக செயல்படும் பூண்டு!"

Post a Comment