ஜாதிக்காயின் நன்மைகள்

ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும்.

ஜாதிக்காய் சற்று அமிலத்தன்மை மிக்க ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயாகும். எனவே இதை அவ்வப்போது பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுகிறது.

நாம் உண்ணும் உணவை நன்றாக செரிமானம் ஆக வயிறு குடல் மற்றும் இதை செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இவர்கள் ஜாதிக்காய் தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர இப்பிரச்சினைகள் நீங்கும். குடல்களில் பூச்சி தொல்லைகளால் அவதியுறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதே முறையில் உட்கொள்ள குடல்புழுக்கள் நீங்க பெறுவார்கள்.

0 Response to "ஜாதிக்காயின் நன்மைகள்"

Post a Comment