இனி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு அலைய வேண்டியதில்லை.. வீட்டில் இருந்தே டிரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்..

ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) என்பது நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. வாகனம் ஓட்டும் எந்தவொரு நபருக்கும் பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீட்டு ஆவணங்களுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இந்த உரிமம் நாட்டின் எந்த மூலையிலும் பொது சாலைகளில் வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது.

எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் முன்பு இது புதுப்பிக்கப்பட வேண்டும். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ஆர்டிஓ தொடர்பான 18 வகையான சேவைகள் இப்போது ஆன்லைனில் கிடைக்கும் என்று கூறியது.. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் சேவையும் இதில் அடங்கும். எனவே தற்போது மக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க RTO அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் ஓட்டுநர் உரிமத்தை வீட்டிலிருந்து புதுப்பிக்கலாம்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..?

போக்குவரத்து சேவையின்படி, உரிமத்தின் முடிவில் இருந்து ஒரு மாதம் வரை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். உரிமம் காலாவதியான 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தால், நீங்கள் முழு செயல்முறையையும் மீண்டும் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், உரிமம் காலாவதியாகும் முன் அல்லது காலாவதியான ஒரு மாதத்திற்குள் புதுப்பித்தலுக்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால், முந்தைய உரிமம் காலாவதியான நாளிலிருந்து உங்கள் புதிய உரிமம் தொடங்கும். உரிமம் காலாவதியான ஒரு மாதத்திற்குப் பிறகு நீங்கள் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தால், நீங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து உங்கள் புதிய உரிமம் உருவாக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?
போக்குவரத்து சேவையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் (இணைப்பு- https://parivahan.gov.in/.)
Online Services என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது license-related services சேவைகளைக் கிளிக் செய்க. இப்போது புதிய பக்கம் திறக்கும்.

இங்கே நீங்கள் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
மீண்டும் புதிய பக்கம் திறக்கும்.

அதில் 'Apply for DL ​​Renewal' என்ற விருப்பத்தை இங்கே தேர்ந்தெடுக்கவும்.
இப்போது உங்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்படும், தேவைப்பட்டால் சில ஆவணங்களையும் கேட்கலாம். சில மாநிலங்களில், உங்களிடம் புகைப்படம் மற்றும் கையொப்பமும் கேட்கப்படலாம். இப்போது கட்டணங்களை செலுத்தி உங்கள் கட்டணத்தை சரிபார்க்கவும்.
இப்போது ரசீதை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள் எதிர்காலத்தில் தேவைக்கு இது உதவக்கூடும்

0 Response to "இனி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு அலைய வேண்டியதில்லை.. வீட்டில் இருந்தே டிரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்.."

Post a Comment