பள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் புகார் பெட்டி' பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
* மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.
* தலைமை ஆசிரியர் ,2 ஆசிரியர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பர்.
* பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர் ,ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பர். * புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிக்க பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.
* புகார்களைப் பதிவு செய்ய மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு தனியாக பதிவேட்டை பராமரிக்கும்.
* வாய்மொழியாக உட்பட எம்முறையில் புகார் பெறப்பட்டாலும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
* ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்.
* ஒரு மாத காலத்தில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.
* குறைகளை தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.
* கிடைக்கப்பெறும் புகார்களை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.
* பள்ளிகளை சார்ந்த அனைத்து அமைப்பினரும் போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்
* பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளி கல்வி துறையால் உருவாக்கப்பட்ட வழங்கப்படும்.
* இணையவழி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்வதோடு அப்பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.
* அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்: தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்: தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்: தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு"
Post a Comment