தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஜூன் 14 முதல் புதிய கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில், ஜூலை 2வது வாரத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிக தீவிரமாக பரவியது. இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் புதிய கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டன. 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு குறித்து நிர்ணயிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஜூன் 14 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது . இந்நிலையில் ஜூலை 2 ஆம் வாரத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
0 Response to " ஜூலை 2வது வாரம் பள்ளிகள் திறப்பு? தமிழக அரசு திட்டம்!!"
Post a Comment