வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்றிருப்பதால் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யவிருப்பதால் மக்கள் அநாவசியமாக வெளியே நடமாட வேண்டாம் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
வெளுத்து வாங்கும் மழை..
இலங்கை அருகே வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் நேற்று காலை முதலாகவே தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து கனமழை கொட்டித் தீர்க்க தொடங்கியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இப்போது வரை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆக மொத்தம், தமிழகத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
டெல்டா மாவட்டங்கள்
வட தமிழகத்தை போல டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. அளவுக்கு அதிகமாக மழை பெய்வதால் பல ஏக்கரிலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணிநேரம்..
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்றிருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 3 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
18 மாவட்டங்கள் என்னென்ன?
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "அடுத்த 3 மணிநேரம் கவனம்.. 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை - வானிலை மையம் "வார்னிங்""
Post a Comment