குரு பெயர்ச்சி பலன் 2024 .. குரோதி தமிழ்புத்தாண்டில் இந்த ராசிக்காரர்கள் கவனம்.. பரிகாரம் அவசியம்!

குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மே 1ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு குரு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

குரு பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகள் பலம் பெறுகின்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சுமாரான பலன்களை பெறுவதால் பரிகாரம் செய்ய வேண்டும். குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி: ஆண்டுக்கு ஒருமுறை குரு பெயர்ச்சி நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்வார் என்று சொல்வார்கள். குரு பெயர்ச்சி பலன்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது. காரணம் ஜாதகத்தில் உள்ளது தசா புத்திகளும், கிரகங்களும் தான்.


ரிஷபம்: குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயணிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். வியாழக்கிழமை குரு பகவானை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்: விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு பெயர்ச்சியால் சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

சிம்மம்: குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். உங்களுடைய தொழில் காரகன் சனி களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம். வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

துலாம்: குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டம குரு கஷ்டங்களைப் போக்குவார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். குரோதி தமிழ் புத்தாண்டில் பணியிடத்தில் புரமோசன் கிடைக்கும். நோய்கள் நீங்கும் உங்கள் நிலைமை சிறப்பாக மாறும் நம்பிக்கையுடன் இருங்கள்.

தனுசு: குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். கடன் தொந்தரவு அதிகமாகும் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். குடும்பத்தில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். பண விசயங்களில் கவனம் தேவை.

மீனம்: குரு பகவான் 3ஆம் இடத்தில் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் கடந்த ஆண்டுகளில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரோதி ஆண்டு முழுவதும் உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய கடின முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

0 Response to "குரு பெயர்ச்சி பலன் 2024 .. குரோதி தமிழ்புத்தாண்டில் இந்த ராசிக்காரர்கள் கவனம்.. பரிகாரம் அவசியம்!"

Post a Comment