ரிஷபம் ராசிக்கான செப்டம்பர் 2024 மாத பலன்கள்


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்: 17ம் தேதி சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19ம் தேதி சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19ம் தேதி பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: வேகத்துடன் விவேகமாகவும் நடந்து கொள்ளும் ரிஷப ராசியினரே! நீங்கள் சிக்கனமாக நடந்து கொள்பவர்கள்.இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ஆறாம் ஸ்தானத்தில் மறைந்திருக்கிறார். ஆனால் அவர் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்கிறார். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். ராசியில் இருக்கும் குரு மனநிம்மதியை தருவார். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தில் சனி இருக்கிறார். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்ப ஸ்தானத்தை செவ்வாய் அலங்கரிக்கிறார்.

குடும்பத்தில் சிறிது நிம்மதி குறைவு ஏற்படலாம். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிது பிணக்கு வரலாம். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

ரோகிணி: எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும். கடும் ஜுரம், விவாதங்கள், கலகம், அடுத்த வீட்டாருடன் சதா சண்டை இவை நேரும். கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்: தடை பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பொருள்வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் தொடரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். இனிமையாக பேசுவதில் வல்லவரான நீங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள் | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள் | சந்திராஷ்டம தினங்கள்: 12, 13 | அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:

0 Response to "ரிஷபம் ராசிக்கான செப்டம்பர் 2024 மாத பலன்கள்"

Post a Comment