அறிவிக்கப்பட்ட தேதியில் 10,11,+2 பொதுத்தேர்வு முடிவை வெளியிட தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை


அறிவிக்கப்பட்ட தேதியில் 10,11,+2 பொதுத்தேர்வு முடிவை வெளியிட தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை

திட்டமிட்டபடி பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிந்தன

இதையடுத்து மார்ச் 23ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. மே 4ம் தேதியுடன் பிளஸ் 2 விடைத்தாள்கள் 70 மையங்களில் திருத்தி முடிக்கப்பட்டன

5ம் தேதி அனைத்து மையங்களில் இருந்தும் மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன

தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணி முழுமை பெற்றதும் மே 16ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது

தற்போது திட்டமிட்டபடி விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டதால், மே 16ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவும், 23ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவும், மே 30ம் தேதி பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகும்