15-ம் ஆண்டு நிறைவையொட்டி அறிவிப்பு வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம்.
நீட் தேர்வு அறிமுகமானதில் இருந்துதமிழக மாணவர்களுக்குத் தன் இணையதளம் மூலமும், அஞ்சல் வழியாகவும் மாதிரி கேள்வித்தாள்களை வழங்கி மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. தன் 15-வது ஆண்டைக் கொண்டாடும் தருணத்தில், நீட் தேர்வை எழுதிய தமிழக மாணவர்களில் அதிக மதிப்பெண் எடுக்கும் 20 பேருக்கு ரூ.2.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குகிறது.
இதனைப் பெற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள ஏதாவது பள்ளியில் படித்து, 2018-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதியிருக்க வேண்டும். பரிசு பெற விரும்பும் மாணவர்கள், 9445483333 அல்லது 9445783333 ஆகிய தொலைபேசி எண்களில் ஏதாவது ஒரு எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தங்கள் நீட் தேர்வு ஹால் டிக்கெட் படம், பெயர், பள்ளியின் பெயர், தங்களின் மொபைல் எண், நீட் தேர்வு பதிவெண் ஆகியவற்றை வரும் மே 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க கல்லூரி முதல்வர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். அவர்களின் முடிவே இறுதியானது. மதிப்பெண்கள் கிடைக்கப் பெற்றவுடன் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும். பின்னர், பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.