ஐ.டி.ஐ., மாணவ, மாணவியருக்கு, இலவசமாக, 'ஷூ' வழங்க, அரசு, 1.20 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவசமாக, 'ஷூ' வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டில், 24 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, 'ஷூ' வழங்குவதற்காக, 1.20 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிஉள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், 24 ஆயிரம் ஜோடி, 'ஷூ'க்கள் வாங்க, டெண்டர் கோரப்பட்டு உள்ளது.