தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை.எண் 05/2018 நாள் 28.02.2018 ன் படி
அறிவிக்கப்பட்ட 330 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 20.05.2018 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளையும் சென்னை உட்பட 15 தேர்வு மையங்களில் OMR தேர்வு முறையில் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கென 68,000 ம் மேற்பட்டவிண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சரியான முறையில் விவரங்ளைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net / www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application.No) அல்லது பயனாளர் குறியீடு (Login id) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். .
நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இரா.சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்.