நடவடிக்கை :
மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வால், மனம் உடைந்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் விரக்தி அடைவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
விசாரணை :
&'மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, கோரினார். அதற்கு நீதிபதிகள், இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், வரும், ௧௨ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.