ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சென்னையில் இன்று முதல் 200 அரசு பஸ்கள் இயக்கம்


சென்னை: 50% அளவுக்கான அரசு ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப உள்ளதால், சென்னை மாநகரில் 200 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல், நான்காவது கட்ட லாக்டவுன், நாடு முழுக்க துவங்கியுள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த லாக்டவுன் நீடிக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் முன்பைவிட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை மாநகரில் இன்று 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கணேசன் அறிவித்து உள்ளார். தலைமை செயலகத்துக்கு ஏற்கனவே உள்ள 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படும்.
தேவை ஏற்படும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசு ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு செல்லலாம் என்றாலும் அவர்கள் தங்கள் சொந்த செலவில் அடிப்படையில்தான் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவை, அவசரப்பணி, 50% அரசு ஊழியர்களுக்காக மார்ச் 25 முதல் 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அதைவிட கூடுதலாக 25 பஸ்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் முதலாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குறைக்கப்பட்ட பஸ் போக்குவரத்து சேவை, சென்னையில், முதன் முறையாக இன்று அதிகரித்துள்ளது. இதனால் சாலையில் இயங்கும் பஸ்களை மக்கள் ஆர்வத்தோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 Response to "ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சென்னையில் இன்று முதல் 200 அரசு பஸ்கள் இயக்கம்"

Post a Comment