COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- ஆன்லைன் விண்ணப்ப பதிவு: தனியார் கல்லூரிகள் ஏற்பாடு
ஆன்லைன் விண்ணப்ப பதிவு: தனியார் கல்லூரிகள் ஏற்பாடு
தமிழ்க்கடல்
திருப்பூர்;தனியார் கல்லுாரிகளில், ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்கியுள்ளன.கொரோனாவால் கடந்த, இரு மாதமாக கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. ஆக.,1 முதல் கல்லுாரிகள், பல்கலை திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு, செப்.,1 முதல் கல்லுாரி திறக்கப்படும்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம், 27ல் துவங்கும் நிலையில், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, தனியார் கல்லுாரிகள் இப்போதே ஆன்லைன் முறையில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வெளியிட துவங்கியுள்ளன.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம் கூறுகையில், ''ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு எந்த தடையும் இல்லை. கடைசிநேர அலைச்சலை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கருத்தில் கொண்டும், பெரும்பாலான தனியார் கல்லுாரிகள், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை, ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளன. மதிப்பெண் பட்டியல் வந்ததும், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும். அரசு கலை கல்லுாரிகளுக்கு, இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை,'' என்றார்.
Subscribe via Email
Related Post
- நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
- அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளில் 114 புதிய இடங்களுக்கு அனுமதி
- மொத்தமாக எல்லாமே மாறப்போகுது.. பள்ளிக்கல்வியில் மெகா மாற்றம்? அன்பில் மகேஷ் உத்தரவு
- விடைத்தாள் சரிபார்ப்பு பணி துவங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ஆன்லைன் விண்ணப்ப பதிவு: தனியார் கல்லூரிகள் ஏற்பாடு"
Post a Comment