
விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.04.2020 தேதியுடன் முடிவுற்ற நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறைவு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய கூட்டுறவுச் சங்கம், விழுப்புரம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 59
பணி : உதவியாளர்
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை.
பொது மற்றும் ஓசி விண்ணப்பதாரர்கள் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணையதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.vpmdrb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08-06-2020 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.vpmdrb.in/how_apply_online.php அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
0 Response to "விழுப்புரம் மாவட்டகூட்டுறவுத் துறையில் வேலை"
Post a Comment