
பிரண்டை இலையை துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் ஒழியும். இஞ்சி, பிரண்டை சேர்த்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும்.
* அடுத்து அதில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.
* வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.
* அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.
* சத்தான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.
0 Comments