வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் உதவும். தினமும் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது.
கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.

கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கினை வகிக்கின்றது.கறிவேப்பிலைக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு.