குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆனாலே தாய்மார்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது வழக்கமாகி வருகிறது. ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

குழந்தைகளுக்கான உணவு..?

குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடாமல் அடம்பிடிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து சமாதானம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. 

ஆனால் அதனை பெற்றோர்கள் உணருவதில்லை. குழந்தைக்கு 6 மாதம் கடந்ததும் தாய் பால் போதாததால் பிஸ்கட்டை குடுத்து பழகுகின்றனர். இதனால் குழந்தைக்கு பசி போகும் என்று நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாமலே குழந்தைக்கு நஞ்சை அளிக்கின்றனர்.

ஏனெனில் பிஸ்கட் தயாரிப்பின் மூலப்பொருட்களான கோதுமை மற்றும் மைதா சுத்திகரிக்கப்பட்டவை. இந்த சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடலுக்கு கெடுதல் அளிக்க கூடியவை. மேலும் பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன், குளுக்கோஸ், ஈஸ்ட் போன்றவை சேர்க்கப்படுகிறது. 

இது உடலுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் கிரீம் பிஸ்கட் போன்றவை இயற்கையான ஃப்ளேவர்களை கொண்டிருக்காது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த பிஸ்கட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுப்பதில்லை. இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நாளடைவில் அவர்களுக்கு செரிமான கோளாறு, குடல் பிரச்சனைகள், போன்றவை ஏற்படுகிறது. 

எனவே தான் குழநதைகளுக்கு பிஸ்கட் தரும் பழக்கத்தை கொண்டுவர கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்