உடலில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் அது கண்களில் பிரதிபலிக்கும். அப்போது சிலர் கண்களில் கைகளை வைத்து கசக்குவார்கள். கண்களை தொடர்ந்து தேய்த்து கொண்டிருந்தால் விழித்திரை பலவீனமடையக்கூடும்.

சிலநேரங்களில் அது சிதைந்து போகவும் செய்யும். விழித்திரை திசுக்களை தொடர்ந்து தேய்த்தால் அதன் தன்மை மாறிவிடக்கூடும். 
இந்தப் பாதிப்பு அதிகமானால் விழித்திரை மாற்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.

கண்களில் தூசுகள் விழுந்தால் எரிச்சல் ஏற்படும். அப்போது கண்களை தேய்க்கத் தூண்டும். 

பலரும் கண்களை கசக்கினால் தூசு வெளியே வந்துவிடும் என்று கருதி, அழுத்தி தேய்க்கிறார்கள். அது தவறு. அதனால் விழித்திரை சேதமடைந்து விடக் கூடும்.