நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும், செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும், குடல் வாயுவை அகற்றும், பேதியைத் தூண்டும், உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். 

நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும், வாந்தி, அருசி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும், இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும்; உடலைப் பலப்படுத்தும். 

நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.