எளிதில் கரையக் கூடிய பெக்டின் என்னும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. இது உடலிலுள்ள மோசமான கொலஸ்ட்ரால்களை வெகுவாகக் குறைக்கிறது. இதனால் பலவிதமான இதய நோய்களும் குறைகின்றன.

ஆப்பிளில் குவெர்செட்டின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது. இது அல்சைமர் என்னும் மோசமான நரம்பு வியாதியைத் தடுப்பதில் வல்லது.

அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆப்பிளில் உள்ள வைட்டமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் புரைகளைத் தவிர்க்க முடியும்.

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வருவதால் டாக்டரிம் போகத் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அழகுக் கலை நிபுணரிடம் செல்வதையும் தவிர்க்கலாம். ஆம், ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்ட்டின் ஆகியவை சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகின்றன.

ஆப்பிளில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி பிரச்சனைகளை அடியோடு விரட்டுகின்றன. மூக்கில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கி, சீரான சுவாசத்திற்கு இது வழி வகுக்கிறது.

ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது. ஆப்பிளில் உள்ள பாலிபீனால் மற்றும் பெக்டின் ஆகியவை செய்யும் மாயம்தான் இது!