அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.

அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.

இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.

அன்னாசிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும்.

பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.

விட்டமின் A,B,C சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சத்தி அதிகம் உள்ள அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

அன்னாச்சி இலைசாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

அன்னாச்சிப்பழச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், முளைக்கோளறு ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.