
சப்பாத்திக்கள்ளியை உணவில் சேர்த்து வர, அந்த உணவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் தாதுக்கள், இரத்த குழாய்களின் செயல்திறனை சரியாக்கி, இரத்த அழுத்த பாதிப்புகள் இல்லாமல் சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது. இதனால், இரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் ஏற்படாமல், உடலை பாதுகாக்கிறது.
மலச்சிக்கல், கல்லீரல் நோய்களுக்கு சத்துகளற்ற உணவுகள், மலச்சிக்கல், குடலில் சேர்ந்த நச்சு வாயு போன்ற காரணங்களால் உண்டாகும் பருத்த பெரு வயிறு பாதிப்புகள் சரியாகி, உடல் நலம் தேற, ஐம்பது மிலி சப்பாத்திக்கள்ளி பாலில், ஐந்து கிராம் என்ற அளவில் கடுக்காய் பொடி அல்லது அதன் விதை நீக்கிய தோல் பகுதி இவற்றை நன்கு கலக்கி, ஐந்து அல்லது ஆறு வாரங்கள் நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை சிறிதளவு, கைவிரல் நுனிகளால் எடுத்து, தினமும் காலையில் நீரில் கலந்து பருகி வர, தொல்லைகள் தந்த பெரு வயிறு பிரச்னைகள் விலகி, நீண்ட நாட்களாக ஆறாத உடல் காயங்கள், வயிற்றுப் புண்கள், கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகி, உடலும் மனமும் புத்துணர்வாகும்.
0 Comments