கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும். இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. 

உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும். வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம் கொழுப்பை வெகுவாக குறைக்கும். லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. 

சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது. சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.