விருச்சிகம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை): இந்த வாரம் எந்த காரியத்தை செய்தாலும் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சனைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் நீடித்து வந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும்.

கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வார்த்தைகளை கையாளும் போது கவனம் தேவை. 

வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 

அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: அம்மனை வணங்கி வர பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.

0 Response to "விருச்சிகம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)"

Post a Comment