
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " சூரியன், பூமி, சந்திரன் ஆகிய கோள்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வருகையில், பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம்.
இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி மிகவும் அரிதான சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.17 முதல் இரவு 7.19 மணிவரை நிகழ்கிறது. ஆசியாவில் இருக்கும் சில நாடுகள், ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், அண்டார்டிகா பகுதியில் சந்திர கிரகணத்தை காணலாம்.

பூமிக்கு மிகவும் நெருக்கமாக நிலா வருகையில், வளிமண்டல ஒளிசிதறல் காரணமாக இரத்த சிவப்பு நிறத்தில் நிலா தோன்றுகிறது. ஆரஞ்சு நிறத்தில் இருந்து இரத்த சிவப்பு வரையில் உள்ள நிறங்களில் நிலா தெரியும். இது இரத்த நிலா என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்த வரையில் முழு சந்திர கிரகணத்தின் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக இவை தென்படும். இதனை அனைத்து பகுதியிலும் இருந்து காண இயலாது. இதனைப்போன்றதொரு அடுத்த சந்திர கிரகணம் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நிகழ்கிறது " என்று தெரிவித்தார்.
0 Response to "வானில் விசித்திரம்... 26 ஆம் தேதி இதனை காணாத்தவறாதீர்கள்.!!"
Post a Comment