பொதுவாக கிராமபுறங்களில் வயல்வெளிகளிலும் நகரங்களில் மாடித்தோட்டங்களிலும் அதிகம் பயிர் செய்யபடும் மிகவும் பரீட்சையமான கீரை தான் சிறு கீரை. சுமாராக 20 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. இந்த சிறுகீரையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் இதனால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
சிறுகீரை செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்க வல்லது.
இந்த கீரைகளில் இரும்புச்சத்து, நீர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின்கள் A, B மற்றும் C ஆகியவையும் அடங்கியுள்ளது.
திணை அரிசி சாதத்துடன் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை சேர்த்து சமைத்து, சிறுகீரை பொரியலோடு சேர்த்து மதிய வேளையில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்தி உயர் இரத்த அழுத்த பிரச்சினையைக் குணப்படுத்தலாம்.
சிறுகீரை மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்த வல்லது.
சிறுகீரை இரத்தத்திலிருந்து நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
இரத்த சோகை பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக சிறுகீரை சாப்பிட வேண்டும்.
சிறுகீரையுடன் சிறிது பச்சை மஞ்சளை சேர்த்து நன்கு அரைத்து சிரங்கு, சொரி, அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நோய்கள் இருக்கும் பகுதிகளில் தேய்த்து வர அந்நோய்கள் குணமாகும்.
இரத்தக் காயங்கள் ஏற்பட்டால் கிருமிகள் பரவாமல் தடுக்கவும், காயங்களை விரைவாக ஆற்றவும் சிறுகீரையை அவ்விடத்தில் வைத்து கட்டலாம்.
துவரம்பருப்பு, வெங்காயத்துடன் சிறுகீரை சேர்த்து கூட்டுகுழம்பு வைத்து 48 நாட்கள் சாப்பிட்டால் உடல் நன்கு வலிமைப்பெறும்.
சிறுநீரக கல் ஏற்படாமல் இருக்க வாரத்திற்கு ஒரு முறையாவது சிறுகீரையைச் சாப்பிடலாம்.
ஆண்கள் சிறுகீரையை அடிக்கடி சாப்பிட்டால் விந்தணுக்கள் உற்பத்தி அதிகமாகி மலட்டுத்தன்மைப் பிரச்சினை நீங்கும்.
வைட்டமின் A சத்து சிறுகீரையில் அதிகம் உள்ளது, இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இரவில் கீரை சாப்பிடலாமா?
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பொதுவாக எந்த கீரை ஆகினும் இரவில் எடுத்துக்கொள்வதை தவிர்த்துவிடவும். அதே போல் முட்டை, பால், தயிர் மற்றும் அசைவ உணவுடன் கீரையைச் சமைக்கவும் கூடாது சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதனால் செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
0 Response to "ரத்தத்தில் இருக்கும் கழிவெல்லாம் வெளியேற இந்த கீரையைக் கண்டிப்பா சாப்பிடுங்க!"
Post a Comment