பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தடுப்பூசி செலுத்த விரும்புவோருக்கு அங்கேயே முகாமிட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று முகாமிட்டு, கொரானா தடுப்பூசி செலுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டு, 30-க்கும் அதிகமானோர் பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும், எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
0 Response to " வீடுகளுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!"
Post a Comment