
ஜூன் மாதம் முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மென்பொருள் செயல்படாது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்த காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மிகவும் பிரபலம். 1995ஆம் ஆண்டு பயன்படுத்த தொடங்கிய இந்த மென்பொருள் 1999 காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. 2002-2003ஆம் ஆண்டுகளில் உலகில் 95% பேர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தினர்.
ஆனால் அதற்கு பிறகு அதன் பயன்பாடு குறையத் தொடங்கியது. காரணம் கூகுள் நிறுவனத்தின் மென்பொருள். கூகுள் குரோம், மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ், ஒபேரா போன்ற இணைய உலவிகளை பயன்படுத்தத் தொடங்கிய பயனாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மறந்தே போனார்கள்.
தற்போது கூகுள் க்ரோம் தான் முதன்மையான மென்பொருளாக உள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செயல்படாது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செயல்பாடு முடிவுக்கு வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 பதிப்புகள் வரை பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
0 Response to "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மூடுவிழா! மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு!!"
Post a Comment