கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றினை அறிவித்துள்ளது. அதன்படி மாதம் 300 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.
கொரோனா நெருக்கடி காரணமாக பலரும் வேலை இழந்துள்ளனர். பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, அவர்கள் பயன்பெறும் வகையில் ஜியோ இந்த சலுதையினை அறிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா பேரிடா் காலம் முழுவதும் ஜியோ பயனாளா்களுக்கு மாதத்துக்கு 300 நிமிடம், அதாவது ஒரு நாளுக்கு 10 நிமிடம் இலவச அழைப்புகள் வழங்கப்படவுள்ளது.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து ஜியோ இந்த சலுகையை அறிவித்துள்ளது . தற்போது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த சலுகை வருடாந்திர திட்டத்தில் இணைந்திருப்பவா்களுக்கு பொருந்தாது என ஜியோ தெரிவித்துள்ளது.
0 Response to "ஜியோ அதிரடி சலுகை! இனி ரீசார்ஜ் செய்யாமல் பேசலாம்!!"
Post a Comment