தீராத தலைவலியை குணமாக்க உதவும் அருமருந்து

இந்த சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர நாள்பட உள்ள தீராத தலைவலி குணமாகும். பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

தேவையான பொருள்கள்

தும்பை இலை (காய்ந்தது) - 50 கிராம்

சீரகம் - 10 கிராம்

அதிமதுரம் - 10 கிராம்

சுக்கு - 10 கிராம்

மிளகு - 10 கிராம்

திப்பிலி - 10 கிராம்

வால் மிளகு - 10 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு தும்பை இலையை எடுத்து சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கை மேல்தோல் சீவி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அதிமதுரம், மிளகு, திப்பிலி மற்றும் வால் மிளகு ஆகியவற்றை தேவையான எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். தேவைப்பட்டால் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் பல வருடங்களாக துன்பத்தை கொடுத்துக் கொண்டியிருக்கும் தீராத தலைவலியை குணமாக்க உதவும் அருமருந்தாகும். மேலும் இந்தச் சூரணம் கண் , காது , மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான தொல்லைகள் அனைத்தையும் தீர்க்க உதவும் சூரணம்.

மேற்கூறிய குறைபாடுகளால் பல வருடங்களாக துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தை தயார்செய்து காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பாட்டிற்கு முன்பு சுடுநீரில் கலத்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

0 Response to " தீராத தலைவலியை குணமாக்க உதவும் அருமருந்து"

Post a Comment