நில அளவையர் பதவியில் 1,089 காலியிடம்: TNPSC தேர்வு அறிவிப்பு

நில அளவையர் உட்பட மூன்று பதவிகளில், 1,089 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள, போட்டி தேர்வுக்கான அறிவிப்பு விபரம்:

தமிழக அரசின் நகர், ஊரமைப்பு துறையில், 

நில அளவையர் 798; 

வரைவாளர் 236; 

உதவி வரைவாளர் 55 

என, 1,089 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிக்கு, அடிப்படை ஊதியமாக குறைந்தபட்சம், 19 ஆயிரத்து 500 ரூபாய் முதல் அதிகபட்சம், 71 ஆயிரத்து 900 ரூபாய் வரை கிடைக்கும். இந்த பணிகளில் சேர, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 60 வயது நிறைந்திருக்க கூடாது.மற்றவர்களுக்கு 32 வயதும், அதில் ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு 37 வயதும், உச்சபட்ச வரம்பாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கல்வி தகுதிl நில அளவையர் பணிக்கு, சிவில் இன்ஜினியரிங் டிப்ளமா; தேசிய தொழிற்கல்வி கவுன்சில் நடத்தும் சர்வேயர் பயிற்சியுடன் கூடிய, தேசிய தொழில் சான்றிதழ் பயிற்சி; சென்னை இன்ஜினியரிங் குழு நடத்தும், ராணுவ நில அளவையர் பணிக்கான இன்ஜினியரிங் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும்l வரைவாளர் பதவிக்கு, டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் படிப்பு, தேசிய தொழிற்கல்வி கவுன்சில் நடத்தும், வரைவாளர் பணிக்கான சான்றிதழ் படிப்பு, சென்னை இன்ஜி., குழு நடத்தும், வரைவாளர் சான்றிதழ் படிப்பில், ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

உதவி வரைவாளர் பணிக்கு, இந்திய தொழிலாளர் அமைச்சகம் நடத்தும் வரைவாளர் படிப்பு; சென்னை இன்ஜி., குழு மற்றும் வரைவாளர் பயிற்சி மையம் நடத்தும் வரைவாளர் சான்றிதழ் படிப்பு; தேசிய தொழிற்கல்வி கவுன்சிலில் தொழில் பழகுனருடன் கூடிய வரைவாளர் சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை முடித்திருக்கலாம் என, கல்வி தகுதியாக கூறப்பட்டுள்ளது. 

தேர்வு நாள்பள்ளிப் படிப்பில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு நவ.,6 காலை மற்றும் பிற்பகலில் போட்டி தேர்வு நடக்கும்.வினாத்தாளில் முதல் தாள் ஐ.டி.ஐ., தரத்திலும், இரண்டாம் தாளில், 10ம் வகுப்பு தமிழ் தகுதி பிரிவு மற்றும் ஐ.டி.ஐ., தரத்தில் பொது படிப்பு வினாக்கள் இடம் பெறும்.போட்டி தேர்வில் பங்கேற்க விரும்புவோர், வரும் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்ய, செப்.,1 முதல் 3ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 Response to "நில அளவையர் பதவியில் 1,089 காலியிடம்: TNPSC தேர்வு அறிவிப்பு"

Post a Comment