நம் உடலில் அதிசய உறுப்புகள் பல இருந்தாலும் அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது கல்லீரல். நம் உடலின் மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் தன்னை தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் திறன் படத்தை ஆச்சரியமான உறுப்பாகும்.
நம் உடலில் பெரும்பாலான நேரங்களில் பிசியாக இருக்கும் உறுப்பால் செய்யப்பட்டு கொண்டிருக்கும் கல்லீரலில் ஏற்பட கூடிய சுமார் 90 சதவீத நோய்கள் தவிர்க்க கூடியதே என்று நிபுணர்கள் சொல்வது, நம் ஆரோக்கியத்தை நாமே எந்த அளவிற்கு சீர்குலைத்து கொள்கிறோம் என்பதற்கான சான்றாக இருக்கிறது. இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்த பெரிய உறுப்பாக இருக்கும் கல்லீரல் நம் ரத்தத்தில் உள்ள பெரும்பாலான கெமிக்கல் லெவல்களை ஒழுங்குபடுத்துகிறது.
வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேறும் அனைத்து ரத்தமும் கல்லீரல் வழியாக தான் செல்கிறது. உணவு செரிக்க தேவையான பித்தநீர், ரத்தம் உறைவதற்கு உதவும் கெமிக்கல் உள்ளிட்டவற்றை கல்லீரல் தான் நமக்கு வழங்குகிறது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்யும் திறன் கொண்ட கல்லீரலை சேதப்படுத்துவது நாம் தான். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தவறும் போது கல்லீரலில் பிரச்சனை மற்றும் நோய்கள் ஏற்படுகிறது.
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, கட்டுப்பாடற்ற உடல் எடை, டைப் 2 நீரிழிவு, அதிகப்படியான கொழுப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உடலில் சேர்வது, மரபியல் அல்லது வைரஸ்கள், காரணமாக கல்லீரல் நோய்கள் ஏற்படலாம்.
உடலில் உள்ள அனைத்து ரத்தத்தையும் வடிகட்டும் முக்கிய பணியை செய்யும் கல்லீரல் சரியாக இயங்குகிறதா என்பதை நாம் ஒவ்வொவருவரும் கண்காணிப்பது அவசியம். நம் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறிகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி தனது இன்ஸ்டா போஸ்ட்டில் ஷேர் செய்து இருக்கிறார்.
0 Response to "கல்லீரல் நோய் ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய ஆரம்ப அறிகுறிகள்.!"
Post a Comment