தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டு தோறும் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறது.
அந்த வகையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவிகள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம். பயிற்சி வகுப்புகள்: சென்னையில் இயங்கும் இராணி மேரி கல்லூரி, மதுரையில் இயங்கும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
முக்கியமான நாட்கள்:
ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 14.11.2022 தேதி முதல் 24.11.2022 வரை.
எழுத்துத் தேர்வு: 01-12-2022 (முற்பகல் 10.30 முதல் 12.30 மணி வரை)
எழுத்துத் தேர்வு முடிவுகள் : 05-12-2022
வயது வரம்பு: 14.11.2022 அன்று விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மேலும், 32 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரங்களுக்கு 5 ஆண்டுகள் வயது வர்மப்பில் சலுகை உண்டு. பிறப்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.
பயிற்சி காலம்: குறைந்தது 6 மாதம்
ராணிமேரி கல்லூரி அல்லது மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள் நடைபெறும்.
தெரிவு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?இராணி மேரி கல்லூரி :, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வரும் 24ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், தேசிய வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ. 200 வரைவோலை ( demand Draft) உடன் கல்லூரி நிர்வாக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப தபால் அட்டையில், CIVIL SERVICES EXAMINATIONS COACHING APPLICATION FOR ENTERANCE EXAMINATION" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வரைவோலையின் பின்புறம் விண்ணப்பதாரின் பெயர், முகவரி எழுதியிருக்க வேண்டும்.
0 Response to "ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு : மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு"
Post a Comment