10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23 முதல் மே 27ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. ஏப் 6 முதல் ஏப் 20 வரை நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 3,976 மையங்களில் 9.38 லட்சம் பேர் எழுதினார்கள்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 91.39 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 94.66 சதவீதமும் 88.16 பெரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்கள் 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 4,30,710 தேர்ச்சியும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 1.32 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 27 முதல் ஜூலை 4 வரை துணைத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மாணவர்கள் துணைத்தேர்வுக்கு மே23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை Www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Response to "10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23 முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு"
Post a Comment