தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 27 - ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வை எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள் மே 23-27-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ல் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
துணைத் தேர்வு மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம், துணைத் தேர்வுக்கான விரிவான காலஅட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
0 Response to "ஜூன் 27- ஜூலை 5 வரை 10, 11-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு"
Post a Comment