தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன.
இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.
இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. சுமார் 2.8 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்திருந்தனர். எனினும், அதில் பெரும்பாலான மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் நலன்கருதி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி https://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
0 Response to "அரசு கலை கல்லூரி மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு"
Post a Comment