நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக,
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டதுகல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக,
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டதுகல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வுக்கு 13,26,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்த 1,07,288 பேரில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
180 கேள்விகள்
தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
இந்நிலையில், பிளஸ் 2 பாடங்களைவிட, பிளஸ்1 பாடங்களில் இருந்துதான் இந்த நீட் தேர்வில்அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நீட் தேர்வில் பிளஸ்1 இயற்பியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 இயற்பியலில் 23 கேள்விகள், பிளஸ்1 வேதியியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 வேதியியலில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்1 தாவரவியலில் 30 கேள்விகள், பிளஸ் 2 தாவரவியலில் 15 கேள்விகளும், பிளஸ்1 விலங்கியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 விலங்கியலில் 23 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன.
தமிழக அரசு அண்மையில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் இயற்பியலில் இருந்து 11 கேள்விகள், வேதியியலில் இருந்து 11 கேள்விகள், தாவரவியலில் இருந்து 29 கேள்விகள், விலங்கியலில் இருந்து 11 கேள்விகள் என மொத்தம் 72 கேள்விகள் (40 சதவீதம்) கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.