10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு வரும் 31 முதல் விண்ணப்பிக்கலாம்


'பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கு, வரும், 31ம் தேதி முதல், ஜூன், 4 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில், ஜூன், 28 முதல், ஜூலை, 6 வரை, சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வில், பங்கேற்க விரும்பும் மாணவர்களும், மார்ச் தேர்வில் பங்கேற்ற தனித்தேர்வர்களும், மே, 31 முதல், ஜூன், 4 வரை விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் வாயிலாக, விண்ணப்பிக்க முடியாது. தேர்வுக்கான அனுமதி சீட்டு வழங்கும் நாள், விரைவில் அறிவிக்கப்படும். இந்த அனுமதி தற்காலிகமானது. மாணவர்களின் விண்ணப்ப நிலை தெரிந்த பின், தேர்வு முடிவு வெளியிடப்படும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு விபரம்

துணை தேர்வுகள், ஜூன், 28 முதல், ஜூலை, 4 வரை, காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 12:45 மணி வரை நடக்கும். ஜூன், 28 - தமிழ் முதல் தாள்; 29 - தமிழ் இரண்டாம் தாள்; 30 - ஆங்கிலம் முதல் தாள்; ஜூலை, 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்; 3 - கணிதம்; 4 - அறிவியல், 5 - சமூக அறிவியல், 6 - விருப்ப மொழி பாடம் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.